Sunday, 24 April 2011

Delayed Justice is injustice

                     ஒரு ரயில்வே கேட்டில் சுமார் 30 நிமிடங்கள் நிற்க வேண்டியதாயிற்று . இதில் என்ன புதிது என்று தானே யோசனை ... எல்லாவற்றையும் Adjust செய்ய பழகிவிட்ட நமக்கு அப்படி தோன்றுவதில் புதிது ஒன்றுமில்லை.

 2 மின்தொடர் வண்டிகளுக்காக மூடப்பட்டது தான் அந்த கேட் . சாமர்த்திய சாலிகள் தங்கள் வண்டிகளை மூடிய கேட்டுக்குள் முக்கி முனகி நுழைத்து கேட்டை தாண்டி சென்றுக்கொண்டு இருந்தனர் . அப்போழுதுத்தான் அங்கு வந்து சேர்ந்தது அந்த  Ambulance . உள்ளே மண்டையில் அடிப்பட்டு இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்தார் ஒருவர் . அந்த மனிதர் விபத்தில் சிக்கிவிட்டார் போல  . விபத்தில் மட்டுமல்ல நம் நாட்டில் பிறந்து சாபத்திலும் சிக்கிவிட்டார் . முதல் மின்தொடர் வண்டி சென்றது . இரெண்டாம் வண்டியோ வந்தபாடில்லை . அருகே இருந்த காவலர் ஒருவர் அந்த ரயில்நிலைய அதிகாரியுடன் தொடர்புக்கொண்டார் , ஆனால் பயன் ஏதுமில்லை . ஏற்கனவே அடுத்த மின்தொடர் வண்டிக்கு signal போட்டாச்சு என்று நிலைய அதிகாரி சொல்லிவிட்டார் . நிலைய அதிகாரியும் தன பங்குக்கு அந்த மின்தொடர் வண்டியின் Driver & Guard ஐ Walkie Talkie மூலம் தொடர்ந்து விஷயத்தை சொன்னார் . ஆனால் அவர்களிடம் இருந்து பதில் ஏதும் இல்லை . அதற்குள் அந்த காவலர் எல்லா வண்டிகளையும் அந்த Ambulance க்கு வழிவிடும்படி அறிவுறுத்திக் கொண்டிருந்தார். எப்படியோ ஒருவழியாக சுமார் 15 நிமிடங்கள் கழித்து அந்த கேட் திறக்கப்பட்டது . ஆனாலும் survival of the fittest என்ற டார்வின் கொள்கையை அப்படியே எடுத்துக்கொண்ட நம்வர்கள் அந்த ambulanceover take செய்து முன்னேறினர். 

அடுத்து அந்த காவலர் சொன்னார் இதுபோன்ற சமயங்களில் உயிர் பிழைக்க ஒவ்வொரு மணித்துளியையும் வீணாக்க கூடாது என்று . 

இது போன்று எத்தனையோ சம்பவங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. 
இந்த சம்பவத்தை யோசித்து பார்த்தேன். 

ஏன் இத்தனை நாள் இந்த சாலையில் பாலம் கட்டப்படவில்லை ?. 
ஏன் சாலை அகலப்படுத்தும் பணி இன்னும் நடக்கவில்லை ?  

இபொழுதுதான் பாலம் கட்ட ஆரம்பித்து இருகிறார்கள் . அதற்கும் நிறைய போராட்டம் . அதற்கு பின் ஒரு அரசியல்வாதியின் கை இருப்பதாக பேச்சு . 

 தினம் தினம் இந்த ரயில்வே கேட் பிரச்சனையால் தன் தாயை மட்டுமல்ல, தன் குடுபத்தினரையும் மக்கள் திட்ட கேட்டுகொண்டு வேலை செய்கிறார் அந்த Gate Man . 

 மக்களுக்கும் யோசிக்கும் தன்மை மங்கி விட்டது .  அரசாங்கம் பாலம் கட்டாததற்கு Gate Man என்ன செய்வார் .
 மக்கள் கேட்க வேண்டியது அந்த தொகுதி M.L.A & M.P.

காலம் தாழ்ந்து கிடைக்கும் நீதி அநீதி(Delayed Justice is injustice) என்று சட்டம் சொல்லுகிறது . 

காலம் தாழ்ந்து நடைபெறும் பணிகளால் எத்தனை உயிர்கள் பலியாகிறது. 

வெள்ளை சட்டை போட்ட கொள்ளைகாரர்கள்(அரசியல்வாதிகள்),கொலைகாரர்களும் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .  

சட்டம் தன் கடைமையை செய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் . பார்த்ததில்லை . 

இனியாவது சட்டம் தன் கடைமையை செய்யுமா?

இந்த அரசியலில் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை தண்டிக்குமா?

இத்தனை உயிர் பலிகள், இனியாவது காலம் தாழ்த்தாமல் பணிகளை முடிக்குமா ?








Saturday, 9 April 2011


Support for Anna Hazare's fast against corruption....


 என்னடா இது வடிகால் வளவன் இதை வைத்து என்ன சொல்ல போகிறார் என்று தானே யோசனை. http://www.causes.com/causes/600460   இதை click செய்து பாருங்கள் . 

It is the fund raising project . which created by American India foundation ...  
ஊழலை ஒழிப்போம் என குரல் கொடுக்க ஒருவர் முன் வந்தால் கூட இந்தியர் யாரும் தனித்தனியாக கூட  

Anna Hazare வுடன் குரல் கொடுக்க முடியவில்லை . அந்த அளவுக்கு நாம் அமெரிக்க ஏகாதிபத்தியதிற்கு பணிந்துவிட்டோம். Anna Hazare வை வைத்து பணம் பண்ணுகிறார்கள். 


இதற்க்கு ஒரு அமெரிக்க இந்திய அமைப்பு தேவை இல்லை . நம் நாட்டில் புறையோடி இருக்கும் ஊழலை சரி செய்தாலே போதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய வல்லரசு த்தான் , மாற்றமே இல்லை.

இந்திய அரசியலை பற்றி உலக அளவில் பேச பேச்சு உரிமை உள்ள மக்களே பேச யோசித்த நிலைமையில் 2G ஊழல் உலக நாடுகளை ஒரு கணம் யோசிக்கவே வைத்துவிட்டது . 
ஊழல் மூலம் இந்திய அரசியல் உலகத்தை அடைவதை விட , இந்திய அரசியல் மற்றும் அரசியல்வாதிகளை உலக அளவில் பேசுவதில் குற்றம் ஒன்றும் இல்லை . 

இந்தியாவின் இன்றைய நிலையை , அதை சரி செய்யும் விதத்தையும் தர்கிக்க ,விவாதிக்க , பேச , எடுத்துரைக்க வடிகால் வளவன் சரியான தளமாக பயன்படும் என நினைக்கிறன் , வாருங்கள் . இது குற்றம் சாட்ட (அல்ல) , குற்றங்களை சரி செய்ய ....